முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் நிவாரணம் குவிந்தும் மக்கள் பட்டினி

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மணிலா, நவ. 16 - பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் ஹயான் புயல் தாக்கியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழ ந்தனர். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. புயல் தாக்கியதில் வீடு இழந்தவர்கள் ஆங் காங்கே உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்கவில்லை. 

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் வந்தபடி உள்ளன. ஆனாலும் அவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. 

சாலைகளில் மரங்களும், இடிபாடுகளும் கிடப்பதால் அவற்றை எடுத்து செல்ல முடியவில்லை. மேலும் புயலினால் ஏராளமான வாகனங்களும் சேதமாகி விட்டன. 

எனவே பொருட்களை எடுத்து செல்வதற்கு போதுமான வாகனம் இல்லை. இதனால் உணவு கிடைக்காமல் பல்லாயிரக் கணக்கானோர் பட்டினி கிடக்கிறார்கள். 

இடிபாடுகளுக்குள் சிக்கி கிடக்கும் உடல்கள் மீட்கப்படாமல் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மீட்பு குழுக்கள் தற்போது தான் மீட்பு பணிகலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முதற்கட்டமாக இடிபாடுகளுக்குள் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? என தேடும் பணி நடந்து வருகிறது. 

மேலும் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு டாக்டர்கள் குழுவினர் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். 

புயல் பாதித்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்