முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா துப்பாக்கி சூட்டில் 31 போ் பலி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, நவ. 17 - லிபியாவி்ல் 2011-ம் ஆண்டு எழுந்த மக்கள் புரட்சியால் அதிபா் கடாபியின் ஆட்சி வீழ்ந்தது. தற்போது பிரதமா் அலி ஜிடன் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. என்றாலும் புரட்சிக்குப்பின் ராணுவத்தின் பல பிரிவுகள் தனது  அதிகார வரம்பை மீறி சேயல்பட்டு வருகின்றன. இதனால் அங்கு உள் நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. கடாபி ஆட்சியின் போது இருந்த அதிகாரிகள் ஊழியா்களின் குடியிருப்பு பகுதிக்குள் ராணுவம் ஆயுதங்களுடன் சென்று மிரட்டி வருகிறது. இதற்கிடையே தலைநகா் திரிபோலியில் இன்று ராணுவ தலைமையகத்தின் முன்பு மிகப்பெரிய ஆா்ப்பாட்டம் நடந்தது.ஆயிரக்கணக்கானோர் வெள்ளைக் கொடியுடன் ஊா்வலமாக வந்து கலந்து கொண்டனா். அப்போது திடீா் என்று ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது ராணுவம் துப்பாக்கியாலும், ராக்கெட் குண்டுகளை வீசியும் சுட்டது. இதில் ஆா்பாட்டக்காரா்கள் 31 போ் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா். இதனால் திரி போலியில் மீண்டும் பதட்டம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்