முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, நவ. 17 - சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து

ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு பாரத  ரத்னா விருது அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. தவிர, இஸ்ரோ தலைவரான சி. என். 

ஆர். ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ராக்கெட் விஞ்ஞானி ராவ் ஏற்கனவே பத்மஸ்ரீ மற்றும் பத்மபூசன் ஆகிய விருதுகளை பெற்று இருக்கிறார். 

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று நீண்டகால

மாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்திய கிரிக்கெட்கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆகியவை இதற்கான சிபாரிசை செய்து இருந்தது. 

ஆனால் கடைசி கட்டத்தில் இந்த சிபாரிசு நிராகரிக்கப்பட்டது. ஹாக்கி யின் முன்னாள் கேப்டனான தயான் சந்தின் பெயர் இதற்குசிபாரிசு செய்யப்பட்டது. 

இந்திய குடிமகனுக்கு அளிக்கப்படும் உயர்ந்த பட்ச விருது பாரத ரத்னா விருதாகும். இதுவரை விளையாட்டு வீரர் யாருக்கும் இந்த விருது அளிக்கப்படவில்லை. இதன் மூலம் பாரத ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமை சச்சினுக்குகிடைத்துள்ளது.  தவிர குறைந்த வயதில் இந்த விருது பெறுபவர் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது. 

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவானான அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்றும் அவரது இடத்தை எந்த வீரராலும் நிரப்ப முடியாது என்றும்,  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சாதனையாளரான டெண்டுல்கருக்கு வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து பாரத ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை தனது தாயாருக்கு அர்ப்பணிப்பதாக மும்பை வீரரான டெண்டுல்கர் உணர்ச்சி பொங்க தெரிவித்து இருக்கிறார். டெண்டுல்கருக்கு இந்த விருதை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய விலையாட்டு அமைச்சகம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் டெண்டுல்கர் பெயர்  நிராகரிக்கப்பட்டது. 

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கும் டெண்டுல்கர்

ஏற்கனவே அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்று இருக்கிறார். 

இதே போன்ற விருதை ஆஸ்திரேலிய அரசும் டெண்டுல்கருக்கு அளித்து அவரை கௌரவித்தது. மேத்யூ ஹைடன் போன்ற வீரர்கள்  இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல்கருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துதெரிவித்து இருக்கிறார். தவிர, உலகம் முழுவதிலும் இருந்தும் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். கிரிக்கெட்டில் பல்வேறுசாதனைகளை படைத்து இருக்கும் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 51 சதத்தையும், ஒரு நாள் போட்டியில் 49 சதத்தையும் புரிந்து இருக்கிறார்.  மேலும் டெஸ்ட்மற்று ஒரு நாள் போட்டிகளில்அதிக ரன் குவித்தும் சாதனை படைத்தது நினைவு கூறத்தக்கது. சரித்திர நாயகனான டெண்டுல்கரின் சாதனைப் பெட்டகத்தில் பல விருதுகளும் கோப்பைகளும் அலங்கரித்து வருகின்றன. அதில் இது ஒரு புதிய மைல் கல்லாகும். 

__________________________________________________________________________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்