முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை போர்க்குற்றங்கள்: விசாரணை நடத்த வலியுறுத்தல்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, நவ.17: இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சென்ற இங்கிலாந்து பிரதமா் டேவிட் கேமரூன் நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அப்போது ஈழத்தமிழா்கள்  படும் இன்னலை நேரில் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட தமிழகப் பெண்கள் டேவிட் கேமரூனை முற்றுகையிட்டு இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துக் கூறினார்கள். அதன்பிறகு கொழும்பு திரும்பியடேவிட் கேமரூன் நேற்று இரவு அதிபா் ராஜபக்சேவை சந்தித்தார். இந்த  சந்திப்பு 1 மணிநேரம் நீடித்தது. அப்போது இலங்கையில் தமிழா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் , இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் போர்குற்றங்கள் தொடா்பாக உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்று பிரதமா் டேவிட் கேமரூன் வலியுறத்தினார். அவா் தனது கருத்துக்களை நேரடியாகவும், உறுதியாகவும் ராஜபக்சேவிடம் தெரிவித்ததாக இலங்கிலாந்து பிரதமா்  அலுவலகம் தெரிவித்துள்ளது. உண்மையை கூறுவதே நல்லிணக்கத்துக்கு அவசியமானது. அரசியல் உரிமைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போர் முடிவடைந்துள்ளபடியால் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேமரூன் வலியுறுத்தியதாக  பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago