முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் எனது உயிர் மூச்சு: சச்சின்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 18  - கிரிக்கெட் தனது உயிர் மூச்சு என்றும், கிரிக்கெட்டுடனான தனது பயணம் தொடரும் என்று நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். 

சர்வதே ச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் மும்பையில் நிருபர்களைச் சந்தித்த டெண்டுல்கர் அவர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 

சச்சின் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது _ கிரிக்கெட் எனது உயிர் மூச்சு. ஓய்வு முடிவு சரியான தருணத்தில் எடுக்கப்பட்டதாகும். இதில் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. 

எனது 24 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் திருப்திகரமாக இருந்தது. இந்த நீண்ட பயணம் தற்போது ஒரு கனவு போல உள்ளது. பாரத ரத்னா விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த விருதை எனது தாயாருக்கும், தாய் நாட்டுக்கும், சமர்ப்பிக்கிறேன். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், கிரிக்கெட்டுடனான எனது உறவு விட்டுப் போகாது. ஏதாவது ஒரு மட்டத்தில் இதன் தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கும். 

தற்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 

நான் தொடர்ந்து ஆட முடியாவிட்டாலும், இந்திய அணியின் வெற்றிக்காக தொடர்ந்து பிரார்த்திக் கொண்டே தான் இருப்பேன். 

கடந்த சில வருடங்களாக எனது உடல் நிலை (பிட்னஸ்) ஒத்துழைக்காததால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. 

இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் அணியின் வெற்றிக்காக ஆட வேண்டும். 

விரைவில் மும்பையில் கிரிக்கெட் அகாடமி துவக்குவேன். திறமையான இளம் வீரர்களை உருவாக்குவேன். 

 இவ்வாறு அவர் கூறினார். 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை புரிந்து இளம் வீரர்களுக்கு வழிகாட்டி

யாக திகழ்கிறார். 

டெஸ்ட் போட்டியில் 51 சதத்தையும், ஒரு நாள் போட்டியில் 49 சதத்தையும் அடித்து இருக்கிறார். மொத்தம் 100 சதம் அடித்து உள்ளார். 

தவிர, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித்தும் சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்