முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இலங்கை அரசுக்குக் கெடு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, நவ.18  - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு விதித்துள்ளார். விடுதலைப் புலிகளு டனான இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு விதித்துள்ளார்.

அவ்வாறு இலங்கை செய்யவில்லை என்றால் ஐ.நா. உரிமைகள் ஆணையத்தை நாடி சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை கேமரூன் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பகுதிக்குச்  சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.  பின்னர் இலங்கை அதிபர் ராஜபட்சேயை அவர் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கேமரூன் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்து சுதந்திரமான மற்றும் நம்பத்தகுந்த விசாரணை உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் நாங்கள் வெளிப் படையாகப் பேசினோம். அப்போது நான், ராஜபட்சேயிடம் இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மார்ச் மாதத்துக்குள் நம்பத்தகுந்த பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக ராஜபட்சேவிடம் தெரிவித்தேன். அப்படி நடைபெறவில்லை என்றால் இந்த விவகா ரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையத்தை எங்கள் நாடு அணுகும் என்றும், அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன். போரினால் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களின் பகுதிகளில் மறு குடியமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தேன். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து தற்போதுதான் இலங்கை மீண்டு வருவதாகவும், எனவே சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் என்னிடம் ராஜபட்சே கூறினார். அவரது நிலைப்பாட்டை நானும் ஏற்றுக்கொண்டேன். போர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் என்ன நடைபெற்றது என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு நான் வலியுறு த்த நேரிடும் என்றும் நான் தெரிவித்தேன்.  வட அயர்லாந்தில் செயல்படும் தீவிரவாதி களால் பிரிட்டன் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருப்பதையும் அங்கு பிரிட்டன் அரசு எவ்வாறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டினேன். பல்வேறு விவகார ங்கள் குறித்து நாங்கள் இருவரும்  வெளிப் படையாகப் பேசினோம். ஆனால் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைக்க கிடைத்த வாய்ப்பாக இதை கருதும்படி நான் அவரிடம் கூறினேன். நான் இங்கு வந்ததால்தான் எனது கருத்துகளை வலியுறுத்த முடிந்தது. இலங்கையில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் தேவைப்படுகிறது. பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட இலங்கை அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறேன். வடக்கு மாகாணத்திள் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்ப்பட்டுள்ள விக்னேஸ்வர னுடனான எனது சந்திப்பு நல்ல முறையில்  அமைந்திருந்தது. இந்த சந்திப்பின்போது வடக்கு மாகாண மக்களின் நலனுக்காக  அவருசன் இணைந்து செயல்பட விரும்புவ தாகக் கூறினேன்.

யாழ்ப்பாணத்துக்கு நான் சென்றதன் நோக்கம் உலகத்தின் ஆதரவை அப்பகுதி மக்களுக்குத் தெரிவிப்பதே ஆகும். விடு தலைப் புலிகள் மீண்டும் வருவதை யாரும் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்தில் என்னை சந்தித்து குறைகள் தெரிவித்தவர்களுக்கு எதிராக பழிவாங்கும் செயலில் இலங்கை அரசு ஈடுபடாது என்று கருதுகிறேன். அடுத்து இலங்கை அரசு என்ன செய்யப் போகிறது என்பதை உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது என்று கேமரூன் கூறினார்.

              

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்