Idhayam Matrimony

என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கூடுதலாக 30 ஆயிரம் இடங்கள்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 17 - தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேருவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. இந்த ஆண்டு புதிதாக சில என்ஜினீயரிங் கல்லூரிகள் துவங்கப்படுவதால், ஏறக்குறைய 30 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் கூறினார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு ஒற்றை சாளர முறை மூலம் கவுன்சிலிங் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பணிகள் நேற்று துவங்கின. விண்ணப்பங்கள் விற்பனை நேற்றிலிருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், நள்ளிரவிலேயே விண்ணப்பங்கள் வாங்க குவிந்துவிட்டனர். எனவே, அதிகாலை 3 மணியிலிருந்தே விற்பனை துவங்கப்பட்டுவிட்டது.  பின்னர் காலையில் நடைபெற்ற துவக்கவிழாவில் துணைவேந்தர் மன்னர்ஜவகர் கூறியதாவது:

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதிலும் 62 மையங்களில் விற்கப்படுகிறது. சென்னையில் 5 மையங்களில் விற்கப்படுகிறது. காலை 3 மணிக்கு துவங்கிய வினியோகம், 9 மணிக்கெல்லாம் 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மொத்தம் 2,30,000 விண்ணப்பங்கள் அச்சடித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதலாக அச்சடித்துக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு, 1,20,000 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.  மேலும் சில கல்லூரிகள் புதிதாக துவங்கப்படுவதால் கடந்த ஆண்டைக்காட்டிலும் இவ்வாண்டு இடங்கள் அதிகரிக்கும்.

அப்படி அதிகரிக்குமானால், கூடுதலாக 30 ஆயிரம் இடங்கள் கிடைக்கும்.

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.  

இவ்வாறு மன்னர்ஜவகர் கூறினார். பேட்டியின்போது என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பிரிவு செயலாளர் ரேமண்ட் உத்திரையராஜ் உடனிருந்தார்.

அதே போல் தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரியில் 1,653 இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள்  விற்பனை நேற்று(16.5.2011) துவங்கியது. ஜூன் 2​ந்தேதி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 2​ந்தேதி மாலை 5 மணி. மருத்துவ படிப்பு விண் ணப்பங்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லுரி, சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். செயலாளர், தேர்வு குழு கீழ்ப்பாக்கம், சென்னை​10 என்ற முகவரிக்கு ரூ.500க்கு டி.டி. எடுத்து கொடுத்து விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 250க்கு டி.டி. எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மருத்துவ கல்வி குழு தேர்வு செயலாளர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறியதாவது:​ முதல் கட்டமாக 25 ஆயிரம் மருத்துவ படிப்பு விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆன்​லைனிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 30​ந்தேதி சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 1​ந்தேதி பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்