டெண்டுல்கர் வீடுகட்ட அனுமதி மறுப்பதா? ராஜ்தாக்ரே கண்டனம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
sachin house1

மும்பை, பிப்.24 - டெண்டுல்கர் மும்பையில் புதிதாக 4 மாடி கொண்ட வீடுகட்டி வருகிறார். இதற்காக நகர வடிவமைப்பு துறையினரிடம் அனுவதி பெற்றிருந்தார். தற்போது ஒருமாடியில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்வதற்காக மீண்டும் மனு செய்தார். ஆனால் இதற்கு வடிவமைப்பு துறையினர் அனுமதி தரவில்லை. இதற்கு மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சித்த தலைவர் ராஜ் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, டெண்டுல்கர் வீடு கட்டுவதில் சிறு மாற்றம் செய்ய சடடரீதியாக அனுவதி கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அனுமதி தர மறுத்துள்ளது மராட்டிய அரசு. உலக அளவில் தெரிந்த இந்தியாவின் புகழுக்கு அணிகலமான ஒருவரை இவ்வாறு அவமதித்திருக்கிறார்கள். ஆனால் வெளிமாநிலத்தவர்கள். சட்ட விரோதமாக வீடுகட்ட அனுமதி அளிக்கும் இந்த அரசு சட்ட ரீதியாக முறைப்படி விண்ணப்பித்த டெண்டுல்கருக்கு மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: