முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கருணாநிதி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மே.17 - பாரம்பரியம் மிக்க தி.மு.கவின் தலைவராக உள்ள கருணாநிதியை தமிழக வரலாற்றில் 2 வது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க செய்துள்ளார் ஜெயலலிதா.திராவிட கழகத்தில் இருந்த அண்ணா, 1935 ல் பெரியார், மணியம்மை திருமணத்தினால் பிரிவு ஏற்பட்டு. தி.மு.கவை தொடங்கினார் அண்ணா. 17.9.1949 ல் அண்ணா தலைமையில் தி.மு.க. உதயமானது. 1957 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தலில் முதல் முறையாக அண்ணா தலைமையில் தி.மு.க. தேர்தல் களமிறங்கியது. சட்டசபைக்கு 124 இடங்களிலும், பாராளுமன்றத்திற்கு 11 இடங்களிலும் தி.மு.க. போட்டியிட்டது. அதில் சட்டசபைக்கு 15 இடங்களிலும், பாராளுமன்றத்திற்கு 2 இடங்களிலும் வென்றது. அதன் பின்பு 1962 ல் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 ம்ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 

தி.மு.க.வின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது எம்.ஜி.ஆர் சுடப்பட்டு கழுத்தில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் இருப்பது போன்ற போஸ்டர்களே. 1969 ல் அண்ணா மறைவுக்கு பின்னர் எம்.ஜி.ஆரின் தயவில் முதல்வரானார் கருணாநிதி. 1971 தேர்தலில் தி.மு.க. கூட்டணி 183 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதன் பின்னர் கருணாநிதியின் வஞ்சகத்தால் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை தொடங்கி மாபெரும் வளர்ச்சி பெற்று கட்சி துவங்கிய 8 மாதத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 

அதன் பின்னர் 1977 ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களை வென்று எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். தி.மு.க. 48 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சியானது. 

1980 தேர்தலில் அ.தி.மு.க. 128 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். தி.மு.க. 38 இடங்களை மட்டுமே பெற்று அப்போதும் எதிர்க்கட்சியானது. 1984 ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், அங்கிருந்தபடியே தமிழக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. 132 இடங்களை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். 1991 தேர்தலில் அ.தி.மு.க 163 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 

அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த இ. காங்கிரஸ், 61 இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. அந்த தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை முதல் முறையாக தி.மு.க இழந்தது. 2001 தேர்தலில் அ.தி.மு.க. 132 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானார். அப்போது தி.மு.க. 28 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. தற்போது 2011 ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க 146 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். இத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க 29 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வோ 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட கருணாநிதியின் தி.மு.கவால். எட்ட முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க எதிர்க்கட்சியாகி விட்டது. 1991 க்கு பிறகு 2011 ல் 2 வது முறையாக எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு ஜெயலலிதா தோல்விகளை ஏற்படுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago