முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷரப் மீது தேச துரோக வழக்கு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.19- பாகிஸ்தான் முன்னாள் அதிபா் பா்வேஷ் முஷரப். இவா் கடந்த 1999 முதல் 2008 வரை பதவி வகித்தார். பின்னா் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடா்ந்து அவா் நாடு கடத்தப்பட்டார். 4ஆண்டுகள் துபாய் மற்றும் லண்டனில் தங்கிருந்த அவா் தோ்தலில் போட்டியிட பாகிஸ்தான் திரும்பினார். அதை தொடா்ந்து  கைது செய்யப்பட்ட அவா் மீது பெனாசிர் கொலை உள்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முஷரப்புக்கு ஜாமீன் கிடைத்தது. அதை தொடா்ந்து நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தனது தாயரை பார்க்க துபாய் செல்ல அனுமதி கேட்டு கடந்த வாரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ருந்தார். இந்த நிலையில் அவா் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தவறான முறையில் அவசர நிலை பிர கடனம் செய்ததற்காக இந்த வழக்கு போடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு கமிட்டி அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பாகிஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் படி ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது. விசாரணை நடத்தி அவா்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் அரசியல் சட்டம் 6-வது பிரிவின் கீழ் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த தகவலை உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலிகான் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரிக்க 3 ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய நடுவா் மன்றம் இன்று அமைக்கப்பட்டுகிறது. மேலும் சிறப்பு அரசு வக்கீலும் நியமிக்கப்படுகிறார். இதற்கு முஷரப்பின் செய்தி தொடா்பாளா் ரசாபொகாரி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த செயல் ராணுவத்தை வலுவிழக்க செய்யும் செயலாகும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்