முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் பந்து வீச்சில் ஐ.சி.சி. சந்தேகம்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 19  - மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சாமுவேல்ஸ் ஷில்லிங்போர்டு ஆகியோரது பந்து வீச்சில் சந்தேகம் எழுந்துள்ளது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி. ) தெரிவித்துள்ளது. 

இருவரது பந்து வீச்சையும் பிரத்யேகமாக ஆய்வு செய்யவும் ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இதில் அவர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரிந்தால் சஸ்பெண்ட் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. 

இந்தியாவுக்ககு எதிராக கொல்கத்தா மற்றும் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவு அணி மோசமாக தோல்வி அடைந்தது. 

மேற்படி 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

2_வது டெஸ்ட் போட்டியின் 2_வது நாள் ஆட்ட நேர முடிவில் சாமுவேல்ஸ், மற்றும் ஷில்லிங்போர்டு ஆகிய இருவரின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பது தெரிய வந்தது. 

சாமுவேல்சின் குயிக்கர் டெலிவரி மற்றும் ஷில்லிங்போர்டின் தூஸ்ரா பந்து வீச்சு முறைகளை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. 

ஆய்வில் ஏதாவது முறைகேடுகள் இருப்பது தெரியவந்தால், மே.இ.தீவு வீரர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.  

ஆனால் ஆய்வு முடிவு வரும் வரை அவர்கள் போட்டிகளில் பங்கேற்க தடையில்லை. இருவரது பந்து வீச்சு மீது இதற்கு முன்பும் சந்தேகம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago