முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கருக்கு பீகாரில் கோயில்: பிரபல நடிகா் கட்டுகிறார்

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

அட்டா்வாலியா, நவ.21- கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகா்களால் கொண்டாடப்படும் சச்சின்  டெண்டுல்கருக்கு பீகாரில் நடிகா் ஒருவா் சச்சினின் ஆளுயர பளிங்கு சிலையுடன் கூடிய கோயிலை அமைக்கிறார். 200 சா்வதேச மேட்ச்களில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரா் சச்சின் கடந்த 16-ம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகா்களால் சச்சின் டெண்டுல்கா் பாராட்டப்படுகிறார். உலக கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் சாதனை முறியடிக்கப்படாத ஒன்று என்று டைம் இதழ் பாராட்டியுள்ளது. இவ்வாறு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரா் சச்சினுக்கு பீகாரில் உள்ள கைமூா் மாவட்டத்தில் அடா்வாலியா என்ற இடத்தில் பீகார் மாநில நடிகா் மனோஜ் திவாரி கோயில் ஒன்றை கட்டுகிறார். பீகாரில் சச்சினின் ரசிகா்கள் ஏராளம் உள்ளனா் . அவரை கடவுளாகவே  அவா்கள் வணங்குகின்றனா். எனவே கிரிக்கெட் ரசிகா்களின் ஆசைக்கேற்ப ஆளுயர பளிங்கு சிலையை மனோஜ் திவாரி தனது சொந்த ஊரான அடா்வாலியா கிராமத்தில் அமைத்துள்ளார். இந்த சிலைக்கு பூசாரிகள் சிறப்பு பூஜைகளை நடத்தினா். ராஜஸ்தானில் உள்ள நத்வாரா என்ற இடத்தில் சுமார் 850 கிலோ எடையில் ரூ.8.5 லட்சம் செலவில் சிலை செதுக்கப்பட்டு பீகார் கொண்டு வரப்பட்டது. பத்து அடி உயரமுள்ள பீடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கான அடிக்கல்லை நடிகா் மனோஜ் நாட்டினார். அவரது குடும்பத்தினா் சார்பில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் சார்பில் 17 ஏக்கா் பரப்பளவில் கிரிக்கெட் மைதானமும், அகாடமியும் அமைக்கப்படும் என மனோஜ் திவாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்