முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள்: இந்தியா - மே.இ.தீவு இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, நவ. 21 இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொச்சியில் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணியின் ஆதிக்கம் இந்தப் போட்டியிலும் தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

கேப்டன் பிராவோ தலைமையிலான மே.இ.தீவு அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் மே.இ. தீவு அணிகளுக்கு இடையே முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. 

முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொல்கத்தா மற்றும் மும்பை டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதது. 

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் இன்று துவங்க இருக்கிறது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக ஒரு நாள் தொடரில் சிறப்பாக ஆடி வெற்றிகளைக் குவித்து வருகிறது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 3_ 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 5_ 0 என்ற கணக்கில் வென்றது. மே.இ.தீவில் நடந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன். 

பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் தொடரை மட்டும் இழந்தது. எனவே மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோக்லி இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். ஆஸி.க்கு  எதிரான தொடரில் இருவரும் சதம் அடித்தனர். 

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷிகார்தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் அடித்தனர். 

தவிர, கேப்டன் தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் தங்களது திறமை யை நிரூபிக்க தயாராக உள்ளனர். 

பந்து வீச்சைப் பொறுத்தவரை புவனேஸ்

வர் குமார் மற்றும் மொகமது சமி இருவரும் வேகப் பந்து வீச்சிற்கு உள்ளனர். அவர்க

ளுக்கு ஆதரவாக அஸ்வின் சுழற் பந்தை வீச இருக்கிறார். 

மே.இ.தீவு அணி முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒரு நாள் தொடரில் வெற்றிக்காக கடுமையாக  போராடும். எனவே ரசிகர்களுக்கு இந்தத் தொடர் நல்ல வேட்டையாகும். 

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மே.இ.தீவு அணியில் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், பிராவோ, சிம்மன்ஸ் மற்றும் போவெல் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். அதிரடி வீரரான பொல்லார்டு இடம் பெறாதது அந்த அணிக்கு இழப்பாகும். 

பந்துவீச்சைப் பொறுத்தவரை டினோ பெஸ்ட், டேரன் சம்மி, ராம்பால்  மற்றும் ஹோல்டர் ஆகியோர் உள்ளனர். அவர்க

ளுக்கு ஆதரவாக சுனில் நரீன், பெருமாள் ஆகியோர் உள்ளனர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. 

இந்திய அணி : _ தோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோக்லி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார்,           மொகமதுசமி, அஸ்வின், அமித் மிஸ்ரா, அம்பாதி ராயுடு, வினய் குமார் , மொகித் சர்மா மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்