முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போனை ஒட்டுக் கேட்டதாக ஆஸ்திரேலியா மீது புகார்

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜாகர்த்தா, நவ.21 - ஸ்னோடென் தகவலின் பேரில்  இந்தோனேஷியா அதிபர் செல்போனை  ஆஸ்திரேலியா ஒட்டுக் கேட்டதகா குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்தி ரேலியா மீதும் வேவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்.எஸ்.ஏ.  உலக நாட்டுத் தலைவர்களின் செல்போன் மற்றும் இ மெயில்களை வேவு பார்த்துத் திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்னோடென் அம்பலப்படுத்தினார்.  இதையடுத்து அவர் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு தகவல் குறித்து கார்டியன் மற்றும் ஏபிசி ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்  2009_ம் ஆண்டு இந்தோனேஷியா அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயானா, துணை அதிபர் போய்தியோனோ மற்றும் முக்கி.ய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் பேச்சுக்களை 15 நாள்களுக்கு ஆ ஸ்திரேலியா உளவு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாக அதில் தெரிவிக்கப்ப்டிருந்தது. 

இது இந்தோனேஷியா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவு இருந்து வரும் வேளையில் ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அதிபர் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயானா தெரிவித்துள்ளார்.  மேலும் தனது டுவிட்டர் இணையதளத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் டோநி அபோத்துக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தோனேஷியா தூதர் நத்ஜீப்பை திரும்ப அழைத்துக்கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டஅமைச்சர் சுயாந்தோ கூறுகையில் 2 நாள்களுக்குள் ஆஸ்திரே லியா விளக்கம் அளிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய நாடாளு மன்றத்தில் இதுகுறித்து பேசிய பிரதமர் டோனி அபோத் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

       

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்