முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெபனானில் - ஈரான் தூதரகம் மீது தாக்குதல்: 23 பேர் பலி

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், நவ.21 - லெபனானில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் உடல் சிதறி பலியானார்கள். சிரியா வில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஷியா, சன்னி பிரிவினருக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடந்தது. பைக்கில் வந்த தற்கொலைப் படை+யைச் சேர்ந்த ஒருவர் ஈரான் தூதரக கேட் மீது பைக்கை மோதவிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்தார். பின்ன்ர் 2 நிமிட இடைவெளியில் தூதரகம் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடந்தது. 

இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் உடல் சிதறி பலியானார்கள். 150 பேர் பலத்த காயமடைந்தனர்.  ஷியா பிரிவைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரான் தூதரகம் மீது   தாக்குதலுக்கு அல்கய்தா தீவிரவாதி களுடன் தொடர்புடைய சன்னி பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். லெபனானில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்ரூட்டில் கார் குண்டு வெடித்ததில் 27 பேர் பலியானார்கள்.  300 பேர் பலத்த காயமடைந்தனர். 

        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago