முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள்: நாசா தகவல்

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

லண்டன், நவ. 21 - செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக அமெரிக்காவின் நாசா மையம் விண்கலன்களை அங்கு அனுப்பியுள்ளது. 

இந்தியாவும் மங்கல்யான் என்ற விண்கலத்தை செலுத்தியுள்ளது. பொதுவாக செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. 

அங்கு தண்ணீர் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று அங்கு கிரானைட் பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான ஆதாரத்தை நாசா மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எரிமலையின் கடும் வெப்பத்தினால் உண்டாகும் பாறைகள் கிரானைட் ஆக மாறுகிறது. அது போன்ற பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் உள்ளன. 

எனவே அவை கிரானைட் மலைகள் மற்றும் பாறைகளாக இருக்கலாம். இந்த தகவலை நாசாவைச் சேர்ந்த பூமி மற்றும் விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப விஞ்ஞானி ஜேம்ஸ் விரே தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்