முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணி தகுதி

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், நவ. 22 - பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் அணி தகுதி  பெற்றது. 

போர்ச்சுகல் அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு இந்த தகுதியை பெற்று உள்ளது. இதில் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய பங்கு வகித்தார். 

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த செவ்வாய்க் கிழமையுடன் முடிவுக்கு வந்தன. 

தகுதிச் சுற்று முடிவுகளைத் தொடர்ந்து போர்ச்சுகல் , கிரேக்கம், குரோசியா, பிரான்ஸ் ஆகிய 4 அணிகளும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. 

போர்ச்சுகல் அணிக்கும், சுவீடன் அணிக்கும் இடையேயான ஆட்டம் என்பதை விட உலக அளவில் புகழ்  பெற்ற போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவுக் கும், சுவீடன் கேப்டன் இப்ராஹிமோவிச் சுக்கும் இடையேயான ஆட்டமாகவே கருதப்பட்டது. 

இந்த ஆட்டம் சுவீடனின் சோல்னா நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்ககளின் ஏகோபித்த ஆதரவுடன் சுவீடன் அணி களமிறங்கியது. 

ஆனால் நட்சத்திர வீரர் ரொனால்டோ வை சுவீடன் வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர் ஹாட்ரிக் கோல் (50,77, 79 நிமிடங்களில்) அடித்தார். 

கடுமையாகப் போராடிய இப்ராஹிமோ விச் தன் பங்குக்கு 2 கோல்களை (68, 72) அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். 

முடிவில் போர்ச்சுகல் அணி 3 _ 2 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து உலகக் கோப்பை முக்கிய போட்டிக்கு முன்னேறியது. 

இந்த ஆட்டத்தின் 76_வது நிமிடம் வரை சுவீடன் அணிக்கு உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு இருந்தது. ஆனால் 77 _ வது நிமிடத்தில் அதனை ரொனால்டோ தனது கால்களால் தட்டிப் பறித்தார். 

தகுதிச் சுற்றில் இரு அணிகளும் 2 முறை மோதின. இரு ஆட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்ததில் ஒட்டு மொத்தமாக போர்ச்சுகல் அணி 4_2   என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

இதனால் அந்த அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி  பெற்றது. இதனைச் தொடர்ந்து 4_வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்