முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி-20 கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், நவ.22 - பாகிஸ்தானிற்கு எதிராக ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 ரன் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) வெற்றி பெற்றது.  

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் நடந்தது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. 

தெ. ஆ. அணி தரப்பில், டி காக் 33 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 43 ரன் எடுத்தார். தவிர, ஆம்லா 31 ரன்னும், டுபிளீசெஸ் 22 ரன்னும், டேவிட்ஸ் 3 ரன்னும் டும்னி 11 ரன்னும், மில்லர் 19 ரன்னும் பார்னல் 6 ரன்னும், மோர்கல் 8 ரன்னும், ஸ்டெயி ன் 1 ரன்னும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைத் கான் மற்றும் மொகமது ஹபீஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தவிர, பிலாவல் பாத்தி, அப்ரிடி தலா 1 விக்கெட் எடுத்தனர். 

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக். அணி பேட்டிங் செய்தது. ஷெஜாத் 9 ரன்னிலும், ஜாம்ஷெட் 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

அப்போது பாகிஸ்தான் அணி 9.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 

மொகமது ஹபீஸ் 13 ரன்னுடனும், உமர் அக்மல் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி  பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மழை பெய்த சமயத்தில் பாக். அணி 64 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி அந்த அணியின் பக்கம் சாய்ந்திருக்கும். இந்த வெற்றியால் 2  போட்டி கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1_ 0 என முன்னிலையில் உள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2_வது மற்றும் கடைசி போட்டி கேப்டவுன் நகரில் இன்று  நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்