முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் போட்டியில் வெற்றி: பௌலர்களுக்கு தோனி பாராட்டு

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, நவ. 23 - மே.இ. தீவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார். 

கேப்டன் டேரன் பிராவோ தலைமையிலான மே.இ. தீவு அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலா ன அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. 

இதன் முதல் போட்டி கொச்சி நகரில் 21 _ம் தேதி நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மே.இ. தீவு அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. 

மே.இ. தீவு அணி தரப்பில் சார்லஸ் 42 ரன்னும், டாரன் பிராவோ 59 ரன்னும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரெய்னா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்திய அணி 212 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவு அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 35.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. 

இந்திய அணி தரப்பில் விராட் கோக்லி 86 ரன்னும் ரோகித் சர்மா 72 ரன்னும் எடுத்தனர். கோக்லிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. 

இந்த வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது _ இந்தப் போட்டியில் எங்களது ஆட்டம் சிறப்பாக அமைந்தது. 

முதலில் நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை. வேகப் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் பந்து வெவ்வேறு விதமாக பவுன்ஸ் ஆனது. 

இதனால் சுழற் பந்தை பயன்படுத்த முடிவு செய்தேன். அவர்கள் சிறப்பாக வீச முடியும் என நினைத்தேன்.  ரெய்னாவை வைத்து முதலில் பந்து வீசினேன். 

இதில் பந்து உயரம் குறைவாகவும், அதிகமாகவும் மாறி மாறி வந்தது. இது பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மீண்டும் ரோகித் சர்மா , விராட் கோக்லி பேட்டிங் அருமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1_ 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2_வது போட்டி 24 _ம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்