முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் போட்டி: 5000 ரன்களைக் கடந்து கோக்லி சாதனை

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, நவ.23  - சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோக்லி 5000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். 

இந்தியா மற்றும் மே.இ. தீவு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் கடந்த 21_ம் தேதி நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவு அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்களை எடுத்து ஆட்டம்  இழந்தது. 

மே.இ. தீவு அணி தரப்பில் பிராவோ 59 ரன்னும், சார்லஸ் 42 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, ரெய்னா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 35.3 ஓவரில் 4 விக்கெட்  இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி 86 ரன்னும், ரோகித் சர்மா 72 ரன்னும் விளாசினர். தவான் 5, ரெய்னா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனி 13, யுவராஜ் சிங் 15 ரன்கள் சேர்த்தனர். 

ஆட்டநாயகன் விருது கோக்லிக்கு அளிக்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1_ 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்தப் போட்டியில் கோக்லி 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 81 ரன்களை எட்டிய போது ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த மே.இ. தீவு முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தார். 

விவியன் ரிச்சர்ட்ஸ் 126 போட்டியில் 114 இன்னிங்சில் பங்கேற்று 5 ஆயிரம் ரன்னைக் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. 

மே.இ.தீவுக்கு எதிரான இந்தப் போட்டி கோக்லி பங்கேற்ற 120_வது ஒரு நாள் போட்டியாகும். தனது 114 _வது இன்னிங்சில் அவர் 5005 ரன்களை எட்டினார். 

இந்திய வீரரான கோக்லி இந்த சாதனையை 25 வயது 16 நாட்களில் புரிந்துள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் இந்த சாதனையை நிகழ்த்தும் 2_வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு சச்சின் 23 வயது 294 நாட்களில் இந்த சானையை நிகழ்த்தி இருந்தார். சச்சின் 138 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்