முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாகப் பட்டினத்தில் மே.இ. தீவுக்கு எதிரான 2-வது ஒரு நாள்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

விசாகப்பட்டினம் , நவ. 24 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2_வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்

று நடைபெற இருக்கிறது. முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இதிலும் வெற்றி பெற்று தொடரைக்  கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கேப்டன் டேரன் பிராவோ தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள்

அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி

தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்திய அணி 2_ 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. கடந்த 21_ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் முதல் போட்டி நடந்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 211 ரன்கள்  இலக்கை 36 ஓவரில் எட்டியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2_வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரைக் கைப்பற்

றும். எனவே தோனி தலைமையிலான இந்திய அணி உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. 

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோக்லி நல்ல பார்மில் உள்ளனர். தவிர, கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோரும் தங்களது திறனை நிரூபிக்க தயாராக உள்ளனர். 

பௌலிங்கைப் பொறுத்தவரையில், சுழற் பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அஸ்வின், ரெய்னா ஆகியோர் நன்கு பந்து வீசி வருகின்றனர். அவர்களுக்கு பக்கபலமாக புவனேஷ்வர் குமார், மொகமது சமி மற்றும் வினய்குமார் ஆகியோர் உள்ளனர். 

டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஒரு நாள் தொடரை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்று மே.இ.தீவு அணி நினைத்தது. 

முதல் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி

ரன்களைக் குவிக்க நினைத்திருந்த அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே அடி விழுந்தது. 

துவக்க வீரரான கெய்ல் ரன் அவுட் செய்யப்பட்டார். மேலும் ரன் எடுக்க ஓடியதில் அவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். 

இதனால் அவர் எஞ்சிய ஆட்டங்களில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. மே.இ.தீவு அணிக்கு இது இழப்பாகும்

இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் அந்த அணி இந்தப் போட்டியில் கடும் போராட்டத்தை அளிக்கும். 

மே.இ.தீவு அணியில் சாமுவேல்ஸ், சார்லஸ், டிவைன் பிராவோ, டேரன் பிராவோ , ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

பௌலிங்கைப் பொறுத்தவரை ராம்பால் மற்றும் ஹோல்டர் நன்கு பந்து வீசி வருகின்றனர். அவர்களுக்கு பக்கபலமாக சுனில்நரீன் மற்றும் டேரன் சம்மி ஆகியோர் உள்ளனர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 2_வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago