முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ .வுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: பாக்., பதிலடி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கேப்டவுன், நவ. 24  - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2_வது 20 _க்கு 20 கிரிக்கெட்  போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 _ 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் தெ.ஆ. வெற்றி  பெற்றது. 

கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டி _20 போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. 

முதல் போட்டியில் தெ.ஆ. அணி வெற்றி பெற்றது. இடையே பெய்த மழை அந்த அணிக்கு கைகொடுத்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அந்த அணி வென்றது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2_வது மற்றும் கடைசி போட்டி கேப்டவுன் நகரில் நேற்று நடந்தது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்னை எடுத்தது. 

பாக். அணி தரப்பில், மொகமதுஹபீஸ் 41 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 63 ரன் எடுத்தார். உமர் அக்மல் 37 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 64 ரன் எடுத்தார். 

தவிர, மூத்த வீரரான சாகித் அப்ரிடி 13 ரன்னும், ஜாம்ஷெத் 19 ரன்னும், ஷெஜாத் 9 ரன்னும் எடுத்தது நினைவு கூறத்தக்கது. 

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் 52 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பர்னெல் மற்றும் பாங்கிசோ தலா 1 விக்கெட் எடுத்தனர். 

177 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை தெ. ஆ. அணிக்கு பாகிஸ்தான் வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்னை எடுத்தது. இதனால் இந்த 2_வது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1_ 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. 

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ஆம்லா 48 ரன்னிலும்,  டிகாக் 26 ரன்னிலும் டுபிளீசெஸ் 6 ரன்னிலும் டிவில்லியர்ஸ் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

தெ. ஆ. அணி வெற்றி  பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. டும்னி மற்றும் மில்லர் களத்தில் இருந்தனர். 

இந்த ஓவரை சோகைல் தன்வீர் வீசினார். 

தெ. ஆ. அணியால் இந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்