முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் பட்டம் வென்றது எப்படி? கார்ல்சென் பேட்டி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, நவ. 24  - உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது எப்படி என்பது குறித்து நார்வே வீரர் கார்ல்சென் கூறியிருக்கிறார். அதன் விபரம் வருமாறு: - 

தமிழக அரசின் ஆதரவுடன் சென்னையில் நடந்த உலக செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) மற்றும் கார்ல்சென் (நார்வே) மோதினர். 

12 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் 6.5 புள்ளிகள் எட்டுபவர் சாம்பியன் பட்டம் வெல்வார்.  இதன் 10_வது சுற்று நேற்று முன் தினம் நடந்தது. 

இதன் முடிவில் கார்ல்சென் 6.5 புள்ளி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். 5 முறை சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார். 

கார்ல்செனுக்கு ரூ. 8.40 கோடி பரிசு தொகை வழங்கப்படுகிறது. தோல்வி கண்ட ஆனந்துக்கு ரூ. 5.60 கோடி அளிக்கப்படுகிறது. இதன் பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் 10 _வது வீரர் கார்ல்சென்.  முதல் நார்வே வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். 

உலக செஸ்சில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து கார்ல்சென் கூறியதாவது _ 5 முறை சாம்பியனான ஆனந்தை வென்று 

பட்டத்தை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நீண்ட காலமாக சாம்பியனாக இருந்துள்ளார். ஆனந்த் செய்த தவறுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். மேலும் நெருக்கடியிலும் இருந்தார். இங்கு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 

இந்த வெற்றி நார்வே நாட்டில் செஸ் போட்டிக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும். இதில் போட்டி ஆரம்பிக்கும்  போது சற்று பதட்டத்துடன் இருந்தேன். 4 சுற்று முடிந்த பிறகு சகஜமானேன் என்றார். 

இந்தப் போட்டி குறித்து ஆனந்த் கூறியதாவது _ இதில் பட்டம் வென்ற கார்ல்செனுக்கு எனது வாழ்த்துகள். 5_வது சுற்றில் ஏற்பட்ட தோல்வி பின்னடைவை ஏற்படுத்தியது. அதுவே போட்டியில் திருப்புமுனையாகும் என்றார். 

இந்த வெற்றி மூலம் அடுத்த உலகப் போட்டிக்கு கார்ல்சென் நேரடியாக தகுதி பெற்றார். தோல்விஅடைந்த ஆனந்த் அடுத்த ஆண்டு நடக்கும் கேன்டிடேட் போட்டியில் 7 வீரர்களுடன் மோதி வெற்றி பெற்றால் உலக போட்டிக்கு தகுதி பெற முடியும். 

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் போனது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

சொந்த மண்ணில் விளையாடிய விஸ்வதாதன் ஆனந்தின் தோல்வி இந்திய 

ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை  அளித்துள்ளது. 

அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து நிலவும் சூழ்நிலையில் இந்தத் தோல்வி ஆனந்துக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்