சீனாவில் நிலநடுக்கம்

Image Unavailable

 

பீஜிங், நவ.24 - சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் ஜங்லிங் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 12.5 கி.மீ. ஆழத்தில் இந்த பூகம்பம்  நிலை கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மைய நிபுணர்கள் தெரிவித்தனர். 

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி இருந்தது என்று சீன புவியியல் மையம் தொரிவித்துள்ளது. இதனால் கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட வில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ