முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் விவகாரம் ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் சி.பி.ஐ போலீசார் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, மே.- 18 - சென்னையில் டாட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வோல்டாஸ் நிலம் பலரது கைகளுக்கு மாறி கடைசியில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் உள்ளது. இந்த நிலத்தை டாட்டா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்ததற்காக கைமாற்றியிருக்கலாம் என்று சி.பி.ஐ  சந்தேகிக்கிறது. இதனையடுத்து ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முதலில் வோல்டாஸ் நிறுவன நிலமான டாட்டாவின் நிலம் 18 பேரின் பெயர்களில் நீண்டகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக இந்த நிலம் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டரி ஒருவரான சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டது. திடீரென ஒருவாரம் கழித்து அந்த நிலம் மலேசியாவைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை ராஜாத்தி அம்மாளின் மற்றொரு ஆடிட்டரான ரத்தினம் செய்ததாக கூறப்படுகிறது. வோல்யாஸ் நிறுவன நிலம் கைமாறிய தொடர்பான சர்ச்சையில் உண்மையை தெரிந்து கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்கள் ரத்தினம், சரவணன் ஆகியோரை அழைத்தனர். அதனை ஏற்று இருவரும் சி.பி.ஐ தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆஜரானார்கள். அவர்களிடம் வோல்டாஸ் நிறுவன நிலம் ஏன், எப்படி, எதற்காக கைமாற்றப்பட்டது என்று தனித்தனியாக விசாரித்தனர். இதற்கு ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தை தனித்தனி ஆவணங்களாக பதிவு செய்துள்ளனர்.
கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதி அளிக்கப்பட உள்ளது. அப்போது டாட்டாவின் நிலமான வோல்டாஸ் நிலம் கைமாறிய விதம் குறித்த ஆவணங்களை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணங்களை பொறுத்தே கனிமொழி எம்.பி., சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்குமான என்பது தெரியவரும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்