அணுசக்தி திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது ஈரான்

Image Unavailable

 

டெக்ரான், நவ, 25 - ஈரான், தனது அணு சக்தி திட்டத்தை தற்காலிகமாக கைவிட ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் அணு சக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகள் 6 ஈரானுடன் ஒரு உடன்படிக்கை செய்துள்ளது. கடந்த 4 நாட்களாக ஜெனிவாவில் நடந்த ஈரான் மற்றும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

இதன்படி, ஈரான் அணுசக்திக்கு தேவையான யுரேனியம் தாதுவை ஊக்குவிக்கும் பணியை அடுத்த 6 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு கைமாறாக, உடன்படிக்கையில் ஈடுபட்ட 6 வல்லரசு நாடுகளும், ஈரான் மீது இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாகவும் இனி வரும் காலங்களில் புதிய பொருளாதார தடை ஏதும் விதிக்கப்படாது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளது.

 

ஈரானின் இந்த ஒத்துழைப்புக்கு வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எதிர்காலத்தில் அணுஆயுதங்கள் தயாரிக்க ஈரான் முயற்சிக்கக் கூடாது எனவும் எச்சரித்தார். ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் அணு சக்தி திட்டம் குறித்து உலக நாடுகளுடன் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ