கராச்சியில் இரட்டை குண்டு வெடிப்பு: 7 பேர் பலி

Image Unavailable

 

கராச்சி, நவ.24 - கராச்சியில் நடந்த  இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். கராச்சியின் பெடரல்_பி பகுதியில் உள்ள அன்கோலியில் அடுத்தடுத்து நடந்த இரு   குண்டு வெடிப்பு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர். தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் சக்தி வாய்ந்த வெடி குண்டைப் பொறுத்தி வெடிக்கச் செய்தனர் என்றும் அப்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும், அங்கிருந்த கட்டிடங்களும் கடுமையாகச் சேதமடைந்தன என்றும் செய்திகள் தெரிவித்தன. இதுபற்றி சிந்து மாகாண தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சர்ஷார்ஜீல் மேமன் கூறுகையில் குண்டு வெடிப்பு சம்பவத் துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல் என்று அவர் கூறினார். 

                         

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ