அமெரிக்க தாக்குதலை எதிர்த்து இம்ரான்கான் போராட்டம்

Image Unavailable

 

பெஷாவர், நவ.25 - அமெரிக்க தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் இம்ரான்கான்போராட்டம் நடத்தினார். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர்_பக்துன்கவா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் முகாம் அமைத்து தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க உளவுத் துறை ஏவுகணை வீசி அழித்து வருகிறது. இதில் தீவிரவாதிகளுடன் பொதுமக்களும் உயிரிழக்கின்றனர். 

எனவே அந்த பகுதியில் அமெரிக்காவின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இம்ரான்கானின் தெக்ரிக் இ_இன்சாப் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கைபர் பக்தூன் கவா பகுதியில் சமீபத்தில் அமெரிக்கா நடத்திய ஏவு கணை தாக்குதலில் மலைவாழ் மக்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரும் இறந்தனர்.  

இதைத் தொடர்ந்து கைபர் பக்தூன் கவா வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  தெக்ரிக் இ_ இன் சாப் கட்சியினர் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பெஷாவரில் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் இம்ரான்கான் பேசினார். அப்போது ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையினருக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை மறிப்போம் என்றார். 

இதைத் தொடர்ந்து ஆவேசம் அடைந்த கட்சித் தொண் டர்கள் ஆயிரக்கணக்கானோ ர் பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தான் செல்லும் நேட்டோ வாகனங்களை தடுத்து மறித்தனர். ரோடுகளில் அமர்ந்து மறியல் செய்தனர். அதேபோன்று கைபர் பத்துன் கவா மாகாணம் வழியாக ஆப்கானிஸ்தான் செல்லும் சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் இம்ரான்கான் கட்சியுடன் அதன் கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க தேசிய கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

        

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ