முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அமைச்சரவை இன்று பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,மே.- 18 - கேரள மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்தது காங்கிரஸ் கூட்டணி.  சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி இன்று பதவியேற்க உள்ளது. அக்கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்கும் எனத் தெரிகிறது.  கூட்டணியில் 20 பேரவை உறுப்பினர்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளது. தங்களுக்கு 5 அமைச்சர்கள் பதவி வேண்டும் என அக்கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மற்றொரு முக்கிய கட்சியான கேரள காங்கிரஸ் மாணி பிரிவு 4 அமைச்சர் பதவி கேட்டு வருகிறது. அத்துடன் பேரவை துணைத் தலைவர் பதவியும் தர வேண்டும் எனவும் கூறியுள்ளது. இக்கட்சிக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இக்கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளே கிடைக்கும் எனத் தெரிகிறது.
முஸ்லீம் லீக்கை பொறுத்தவரை அக்கட்சி விரும்பும் துறைகள் ஒதுக்கப்பட்டால் அமைச்சர்கள் எண்ணிக்கையில் பிடிவாதம் பிடிக்காது என கூறப்படுகிறது. முன்னணி கட்சிகளிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இவற்றை தொடர்ந்து ஒரே எம்.எல்.ஏ. கொண்ட கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தரலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி கேரள காங்கிரஸ் ஜேக்கப் கட்சியின் டி. எம். ஜேக்கப் கேரள காங்கிரஸ் பாலகிருஷ்ணன் பிரிவை சேர்ந்த கே.பி.கணேஷ்குமார், ராஷ்டிரிய சோசியலிஸ்ட் கட்சி பேபி பிரிவை சேர்ந்த ஷிபு பேபிஜான் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அக்கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம் பெறும் எம்.எல்.ஏக்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் முடிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதற்கு கட்சி மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அமைச்சர்கள் பெயர் வெளியிடப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago