முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்., இங்கிலாந்தை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிரிஸ்பேன், நவ. 26 - இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஆஷஸ் தொடர் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 381 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

இரு அணிகளுக்கு இடையேயான முதல்         டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்களும், இங்கிலாந்து அணி 136 ரன்களும் எடுத்தன. 

இதையடுத்து 2_வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளெர் செய்தது. 

இங்கிலாந்து அணி 2_வது இன்னிங்சில் 561 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய ஸ்கோரை இலக்காக ஆஸ்திரேலிய அணி வைத்தது. 

கடும் நெருக்கடியில் 2_ வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 3_ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது.  அப்போது கேப்டன் அலிஸ்டார் கூக் 11 ரன்னுடனும், பீட்டர்சன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

ஞாயிற்றுக்கிழமை 4_ம் நாள் ஆட்டம் நடந்தது. தனது 100_வது டெஸ்டில் சாதிப் பார் என எதிர்பார்க்கப்பட்ட பீட்டர்சன் 26 ரன்னில் ஏமாற்றினார். 

இயான் பெல் _கூக் ஜோடி அணியின் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தியது. ஜான்சன் பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய கூக் அரை சதம் எட்டினார். 

ஆனால் அவருக்கு இணையாக ஆடி வந்த பெல் 32 ரன் எடுத்த நிலையில்,  பீட்டர்சிடில்  பந்தில் விக்கெட் கீப்பர் ஹேடினிடம் கேட் ச் கொடுத்தார். 

தேனீர் இடைவேளைக்கு முன்னதாக மழை வந்தது. அப்போது மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் ஆட்டம் பாதிக்கப்பட வேண்டும் கடவுளே. இங்கிலாந்தைக் காப்பாற்று என உரக்கக் கத்தினர். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 

தனி ஆளாக தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த கூக் 65 ரன் எடுத்த நிலையில் லியான் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார். 

இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 142 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. பிரையர் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

தவிர, ஸ்டூவர்ட் பிராட் 4 ரன்னிலும், ஸ்வான் பூஜ்யத்திலும், ஆண்டர்சன் 2 ரன்னிலும் ஜான்சன் பந்தில் ஆட்டம் இழந்தனர். டிரம்லெட்டை ( 7ரன் ) ஹாரிஸ் அவுட்டாக்கினார். 

முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1_ 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.  ஆஸி. வீரர் ஜான்சன் 5 விக்கெட் வீழ்த்தினார். 

பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானம் ஆஸ்திரேலியாவிற்கு ராசியான மைதானம் என்பது மீண்டும் நிரூபணமானது. 

கடந்த 1988 _ம் ஆண்டிலிருந்து இங்கு நடந்த எந்தவொரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியைச் சந்திக்க வில்லை என்ற சாதனையை தக்க வைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்