முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ. தீவுக்கு எதிரான 2-வது போட்டி தோல்வி: தோனி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

விசாகப்பட்டினம், நவ.26 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2_வது ஒரு நாள் போட்டியில்      இந்தியஅணியின் தோல்விக்கு காரணம்  பந்து வீச்சாளர்கள் அல்ல என்று கேப்டன் தோனி கூறினார். 

இந்தியா மற்றும் மே. இ. தீவுகள் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. 

இதன் 2_வது போட்டி விசாகப்பட்டினத்தில் 24_ம் தேதி நடைபெற்றது. இதில் மே.இ. தீவு அணி பரபரப்பான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி 99 ரன்னும், கேப்டன் தோனி 40 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். ராம்பால் 4 விக்கெட் கைப்பற் றினார். 

பின்பு விலையாடிய மே.இ. தீவு அணி 3 பந்து எஞ்சி இருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. 

மே.இ. தீவு அணி தரப்பில் கேப்டன் டேரன் சம்மி 45 பந்தில் 63 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), சிம்மன்ஸ் 62 ரன்னும் , போவெல் 59 ரன்னும், டாரன் பிராவோ 50 ரன்னும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, மற்றும் அஸ்வின் மூவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 

இந்தத் தோல்வி குறித்து கேப்டன் தோனி நிருபர்களிடம் தெரிவித்ததாவது _ இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பனித்துளியே காரணம் . பந்து வீச்சாளர்களை குறை சொல்ல முடியாது. ஆண்டின் சில பகுதியில் பனி பொழிவு இருக்கும். முன்னதாகவே பனி பொழிவு இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 

பனித் துளியால் பௌலர்கள் பந்தை பிடித்து நேர்த்தியாக வீச சிரமப்பட்டடனர். இது ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கெள்லாம் ஒன்றும் செய்ய முடியாது. 

பனி பொழிவு நேரத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். எங்களது பௌலிங்கில் முதல் 5 ஓவர் வரை தான் பந்து ஸ்விங் ஆனது. 

அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. 3_வது மற்றும் கடைசி போட்டி பகல் ஆட்டமாக நடக்கிறது. 

இதனால் பனிபொழிவு பிரச்சினை இருக்காது. யுவராஜ் சிங் கடந்த சில ஆட்டங்களில் ரன் குவிக்க சிரமப்பட்டு வருகிறார். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இவ்வாறு தோனி கூறியுள்ளார். 

மே.இ. தீவு அணியின் இந்த வெற்றியின் மூலம் 3  போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1_ 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 3_வது மற்றும் கடைசி போட்டி வருகி ற 27_ம் தேதி (புதன் கிழமை) நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago