சினாவில் 2 கப்பல் கவிழ்ந்து 10 பேர் கடலில் மூழ்கி சாவு

Image Unavailable

 

பீஜிங், நவ.27 - சீனாவில் உள்ள ஷாங்கடாங் மாகாணத்தில் கடல் பகுதியில் 2 சரக்கு கப்பல்கள் வெவ்வேறு இடங்களில் நடுக்கடலில் கவிழ்ந்தன. இதுகுறித்து மீட்பு படை அதிகாரிகள் கூறுகையில், தியான்ஜின் பகுதியில் கப்பல் ஒன்று, வெய்கெய் நகரத்தின் அருகே கடலில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 2 மணியளவில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பேர் மூழ்கி மாயமாகினர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டரிலும்,படகுகளிலும் சென்று நீரில் மூழகி இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். கப்பல் ஊழியர்கள் 16 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றனர்.அதேபோல் ஜிஜியாங் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு சரக்கு கப்பல் யாந்தாய் நகரத்தில் இருந்து கிளம்பியது. இரவு 9 மணியளவில்  நடுக்கடலில் இக்கப்பல் கவிழ்ந்தது. இக்கப்பல் கட்டுமான கற்களை ஏற்றி சென்றதாக தெரிகிறது. கப்பலில் இருந்த 3பேர் நீரில் மூழ்கி பலியாயினர். மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர்.அவர்களையும் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ