முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்களுக்கு துரோகம் செய்ததாலேயே தி.மு.க. தண்டிக்கப்பட்டுள்ளது-சீமான்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

வேலூர், மே.- 18 - இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்ததாலேயே தி.மு.க. தண்டிக்கப்பட்டுள்ளது என்று சீமான் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 2009 மே.18ல் இலங்கை முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை இரண்டாம் ஆண்டு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நாள் தேசிய துக்க நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. வேலூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தப்படுகிறது. ஐ.நா. சபையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இலங்கை தமிழர் விடுதலைக்காகவும் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் வாடுவோர்களது விடுதலைக்காகவும் தமிழக மீனவர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரியும் இந்த பேரணி நடக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்யாத இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிங்களர்கள் என்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள். தமிழர்கள் மட்டுமே இணக்கமாக இருப்பார்கள். 5 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையில் மாற்றம் வேண்டும். நடந்த தேர்தலில் தமிழர்களுக்கு துரோகம் செய்ததால் தி.மு.க. தண்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவித்தபடி ராஜபக்சே மீது போர்க்குற்றவாளி என நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற 2 தீர்மானங்கள் சட்ட சபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்