முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் தமிழகம் அதிமுகவின் எஃகு கோட்டையானது மதுரையில் திமுக வாஸ் அவுட் ஆனது

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், மே.- 18  - நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் அதிமுக  அதிக இடங்களை வெற்றி பெற்று அதிமுகவின் எஃகு கோட்டையாக மாறியுள்ளது. இதில் மதுரையில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து திமுக வாஸ் அவுட் ஆனது. இதுபற்றிய விபரம் வருமாறு 2011 சட்டமன்ற தேர்தலில் தென் தமிழகத்தை புரட்சித்தலைவி  ஜெயலலிதா மிகுந்த அக்கறையோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும்  எதிர்பார்த்திருந்தார். காரணம் அதற்கு அவர் முன்கூட்டியே வகுத்த வியூகங்கள்தான். தென் தமிழகம் எப்போதுமே அதிமுகவின் எஃகு கோட்டையாகத்தான் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில தேர்தல்களாக சிறு,சிறு பின்னடைவை சந்தித்ததால் தென் தமிழகத்தை மீண்டும் எஃகு கோட்டையாக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தார்கள். அதன்படி மதுரை, விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக தற்போதைய தகவல் தொழில் நுட்ப அமைச்சரான கழக மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமாரை நியமித்தார்கள்.
புரட்சித்தலைவியின் உத்தரவுக்கிணங்க மாவட்டம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு புரட்சித்தலைவியின் கட்டளைக்கிணங்க கட்சியை வலிமையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக மதுரையில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.
மேலும் மதுரையில் கடந்தாண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையிலான ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு மதுரையில் இடம் தராமல் ஆளுங்கட்சி தரப்பில் கடும் நெடுக்கடி கொடுத்த போதிலும் புரட்சித்தலைவியின் மீது கொண்ட விசுவாசத்தால் ஆர்ப்பாட்டத்திற்கு  தேவையான இடத்தை  இவரது முயற்சியால் ரிங் ரோடு மைதானம் கிடைத்தது. புரட்சித்தலைவியின் மீதும் கழகத்தின் மீது தீராத பற்று கொண்டதால்  தேர்தலுக்கு முன் இவரது ஏற்பாட்டில் பிரசார சிடி தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஒவ்வொரு கட்டளையையும், வியூகங்களையும், உத்தரவையும் உடனடியாக சிறப்புற ஆர்.பி.உதயகுமார் செய்தார்.
இதன் விளைவாக நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் தென் தமிழகத்தில் மதுரை,திண்டுக்கல்,தேனி,ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது தென் மாவட்டங்களில் மொத்தம் 58 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இம்மாவட்டங்களில் அதிமுக கூட்டணி (அதிமுக 31 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும், மார்க்சிஸ்ட் 3 இடங்களையும், இ.கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், சமத்துவ மக்கள் கட்சி 2 இடங்களையும், மனிதநேய மக்கள் கட்சி 1 இடங்களையும் புதிய தமிழகம் 2 இடங்களையும் பிடித்தன)இதில் அதிமுக மட்டும் 31 இடங்களை கைப்பற்றியது. மதுரையில் 10 தொகுதிகளில்  அனைத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி பெற்று மதுரையில் திமுகவை வாஸ் அவுட் செய்தது. இவையனைத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறந்த வியூகம் என பொதுமக்கள் பாராட்டுகின்றனர். மேலும் அவருடைய கட்டளைக்கு பணிந்து  சிறப்பாக செயல்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
மொத்தத்தில் தென் தமிழகம் அதிமுகவின் எஃகு கோட்டையாக மாறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்