முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான 3-வது ஒரு நாள்: இந்திய அணி வெற்றி

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கான்பூர், நவ. 28 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற 3_வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2_ 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய ஷிகார் தவான் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பக்கபலமாக யுவராஜ் சிங், ரெய்னா, மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் ஆடினர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 3_வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பூரில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற் ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மே.இ.தீவு அணி பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டது. 

முதலில் களம் இறங்கிய மே.இ.தீவு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 263 ரன்னை எடுத்தது. 

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். இதனால் அந்த அணி வீரர்கள் ரன் எடுக்க திணறினர். 

மே.இ.தீவு அணி தரப்பில், போவெல் மற்றும் மார்லான் சாமுவேல்ஸ் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். போவெல் இறுதியில் 70 ரன்னிலும், சாமுவேல்ஸ் 71 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

இந்திய அணி 264 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவு அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்திய அணி இந்த 3_வது  போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2_ 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

முன்னதாக டெஸ் ட் தொடரை 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடரையும் 2_ 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய தவான் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

ஷிகார் தவான் 73 பந்தில் 119 ரன்னை எடுத்தார். இதில் 20 பவுண்டரி அடக்கம். ஒரு நாள் போட்டியில் இந்த ஆண்டு அவர் அடித்த 5_வது சதம் இது என்பது நினைவு கூறத்தக்கது 

தவானுடன் இணைந்து ஆடிய யுவராஜ் சிங் 74 பந்தில் 55 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவானும், சிங்கும் இணைந்து 3_வது விக்கெட்டிற்கு 129 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

தவிர, சுரேஷ் ரெய்னா 34 ரன்னையும், கேப்டன் தோனி 23 ரன்னையும் எடுத்தனர். முன்னதாக ரோகித்சர்மா 4 ரன்னிலும், விராட் கோக்லி 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

இந்திய அணியின் ஸ்கோர் 61 ரன்னில் இருந்த போது, 2 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது . அப்போது தவான் மற்றும் சிங் இருவரும் இணைந்து புத்திசாதுர்யமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

மே.இ.தீவு அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ரவி ராம்பால் 55 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஷிகார்தவானும் தொடர் நாயகனாக விராட் கோக்லியும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்