சீனா அறிவித்த எல்லையில் அமெரிக்கா சாகசம்

Image Unavailable

 

பீஜிங், நவ.28 - சீனா அறிவித்துள்ள வான் பாதுகாப்பு மண்டலத்தில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள கடல் பகுதியை சீனாவும், ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இங்கு சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக விமானம் தாங்கி போர்க் கப்பல்களை நிறுத்தி அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த போர்க்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. கடந்தசில நாட்களுக்குமுன்பு, இந்த பகுதி தன்னுடைய வான் பாதுகாப்பு மண்டலத்தில் வருகிறது என்று சீனா தன்னிச்சையாக அறிவித்தது. எனவே அந்த பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் அனுமதியின்றி பறக்கக் கூடாது என்றும் கூறியது. இதனால், சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளும் கண்டித்துள்ளன. இப்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றால்,அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும்  நல்லதல்ல. இதனால், சீனாவின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் வகையில், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று முன்தினம் பி52 ரக இரண்டு போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பியது. இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் வாரன் கூறுகையில், " சீனாவுக்கு இதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எங்களது விமானங்கள் அந்த பகுதியில் வான் சாகச பயிற்சியில் ஈடுபட்டன. ஆனால் இந்த பயிற்சிக்கு ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து உடனடியாக சீனா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ