சச்சினை புகழ வேண்டாம்: தாலிபான் எச்சரிக்கை

Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ, 29 - கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து செய்திகளோ, கட்டுரைகளோ வெளியிடக் கூடாது என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 16-ஆம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் குறித்த செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியாகின. அவர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 'தெஹ்ரிக் இ தாலிபன்' தீவிரவாதிகள் அமைப்பு, பாக். ஊடகங்களுக்கு எச்சரிக்கை வீடியோ பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ