முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை ஓட்டெடுப்பில் தாய்லாந்து பிரதமர் வெற்றி

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாங்காக், நவ.29 - தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லத் சினவத்ராவுக்கு எதிராக எதிர் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு லட்சம் பேர் தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் திரண்டு அரசு அலுவலகங்களை கைப்பற்றி வருகிறார்கள். பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமெனவற்புறுத்தி இந்த போரட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே பிரதமர் மீது எதிர் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். எனவே அவர் பதவி தப்புமா ?என்ற கேள்வி எழுந்தது. இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் 492 உறுப்பினர்கள் கொண்ட சபையில் பிரதமருக்கு ஆதரவாக 297 ஓட்டுகளும், எதிராக134 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம் நம்பிக்கை ஓட்டெப்பில் யிங்லத் சினவத்ரா வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் பதவி தப்பியது. ஆனாலும் நகரில் எதிர்கட்சிகள் நடத்தி வரும் போரட்டம் தொடந்து நீடித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்