முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி வீரர்கள் மீது கடும் சட்டப் பிரிவில் வழக்கு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 29  - குமரி மீனவர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதும் மரண தண்டனை விதிக்கக் கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். 

கேரள கடல் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் இருவரை அந்த வழியாக சென்ற இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். 

இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த வீரர்கள் மாசிமி வானோ, சல்வதோர் ஆகியோரை கேரள போலீஸ் கைது செய்தது. 

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த வழக்கு புதுடெல்லிக்கு மாற்றப்பட்டு தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட இத்தாலி வீரர்கள் அனுமதி கேட்டனர். 

இத்தாலி அரசின் உத்தரவாதத்தை ஏற்று அவர்கள் சொந்த ஊர் செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. ஆனால் இத்தாலி சென்ற கடற்படடை வீரர்களை இந்தியா அனுப்ப அந்நாட்டு அரசு மறுத்து விட்ட்து. 

வெளியுறவு அமைச்சர் சல்மான்குர்ஷித் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் பேசினார். மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர மாட்டோம் என இந்தியா சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இத்தாலி வீரர்கள் இந்தியா வந்தனர். தற்போது அவர்கள் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் தங்கியுள்ளனர். 

இதற்கிடையில் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் 4 பேரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெறப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் வாக்குறுதியை மீறி இத்தாலி வீரர்கள் மீது மரண தண்டனை பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். 

அறிக்கை கிடைத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago