முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, நவ. 30 _ லிபியாவின் தெற்கு பகுதியில் உள்ள சாபா நகரம் அருகே பிராக் அல் சடி பகுதி உள்ளது. அங்கு அரசுக்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. 

அங்கு லிபியாவை சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்கர்கள் சிலரும் சேர்ந்து ஆயுதங்களை திருட உள்ளே புகுந்தனர். 

அப்போது அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆயுதங்கள் வெடித்து சித றின.  அதில் 40  பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே இச்சம்பவத்தில் மேலும் பலர் பலியாகக் கூடும் என தெரிகிறது. 

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில் லை. ஒரு வேளை ஆயுத கொள்ளையர்கள் தீ வைத்ததில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

கடாபியின் ஆட்சிக்குப் பிறகு ஆயுத கிடங்கு பாதுகாப்பதில் ராணுவம் படாதபாடு படுகிறது. ஏனெனில் தீவிர வாதிகள் மற்றும் கடத்தல் கும்பல் ஆயுதங்களை கொள்ளையடித்து வருகின்றன. 

இது தவிர, லிபியாவில் தீவிரவாதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. பெங்காசியில் சிறப்பு ராணுவ படைக்கும் அன்சர் _ அல் _ ஷரியா தீவிரவாதிகளுக் கும் இடையே நடந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

வெடி பொருட்கள் ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் வந்த தீவிரவாதிகள் காரை ராணுவ வீரர்கள் மறித்து சோதனையிட்டதால் இந்த மோதல் மூண்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago