முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் அதிபருடன் நவாஸ் ஷெரீப் இன்று பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 30 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,டிச.1 - ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று சந்தித்து பேசுகிறார். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் அடுத்தாண்டு இறுதிக்குள் முழுமையாக வெளியேற உள்ளன. மேலும் விரைவில் ஆப்கான் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேட்டோ படைகள் வாபஸ் பெற்றால் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலை உள்ளது. தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்று ஆப்கன் அதிபர் கர்சாயுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான நல்லுறவு, வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு மற்றும ஆசிய பிராந்தியத்தில் அமைதிக்கான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசுகின்றனர். இந்த பயணத்தின்போது ஆப்கானிஸ்தானின் உயர்மட்ட அமைதிக்குழுவின் தலைவர் ஜலாலுதீன் ரப்பானியையும் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசுகிறார். ஆப்கன்_பாகிஸ்தான் ஆகிய பிராந்தியங்களில் அமெரிக்காவின் ஆள் இல்லா விமானம் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தலிபான்களின் உயர்மட்ட தலைவர்கள் 35 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. ஆனால் தலிபான்களுடனான அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையாக அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்கள் உள்ளதாக இருநாட்டு தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதனிடையே சில வருடங்களாக ஆப்கன்_பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் ரூ.15 ஆயிரத்து 222 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்