முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார்களை சந்திக்கும் ஊழல் எதிர்ப்பு பிரமுகர்கள்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.1 - அமெரிக்காவின் அசாங்கே முதல் நீதிபதி கங்குலி வரை முக்கிய பிரமுகர்கள் பாலியல் புகார்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஊழக்கு  எதிராக தீவிரமாக இயங்கியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. உயர்பதவிகளில் உள்ளவர்கள் பாலியல் புகார்களை பாலியல் புகார்களை சந்திக்கும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண் வக்கீலிடம் தவறாக நடந்ததாக புகார் கூறப்பட்டது. சம்பவம் நடந்து ஒருவருடமான பிறகு அந்த பெண் வக்கீல இணையதளத்தில் இதுபற்றி குறிப்பிட்டார். உடனடியாக  இதுபற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஒரு குழு அமைத்தார். அந்த குழு பெண் வக்கீலையும், சம்பந்தப்பட்ட நீதிபதியையும் அழைத்து விசாரித்தது. தற்போது அந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. இதன்பிறகே, நீதிபதியின் பெயர் ஏ.கே.கங்குலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் பெயர் அடிபடுவதை தவிர்க்கவே கங்குலி பெயரை வெளியிட்டதாக கூறியுள்ளனர். இந்த குற்றசி சாட்டை நீதிபதி கங்குலி மறுத்துள்ளார் அவர் கூறியதாவது:- இந்த புகாரை அடியோடு மறுக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண் வக்கீல் முறைப்படிஎன்னிடம் பயிற்சிக்கு வந்தவர் அல்ல. மற்றொரு பெண் வக்கீல் மணம் முடித்து வெளிநாடு சென்றதால இந்த பெண் பயிற்சிக்கு வந்தார். இவர் பலமுறை என்னை சந்தித்துள்ளார். ஆனால், இதுபோன்று புகார் கூறியது ஏன் என்று தெரியவில்லை. நேர்மையான நீதிபதிகள் மீது இவ்வாறு புகார் கூறினால் முறையாக பணி செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறினார். நீதிபதி கங்குலி அலை வரிசை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை கணகாணித்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பாலியல் புகார்களில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. அவர் எந்த நேரமும் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார். தற்போது நீதிபதி ஏ.கே.கங்குலியும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இதுதவிர, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்டபாளர் நரேந்திரமோடி மீதும் பெண் தொடர்பான புகார்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன. அவர் முன்பு குஜராத்தில் மந்திரியாக  இருந்த அமித்ஷா மூலம் ஒரு பெண்ணை கண்காணிக்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony