முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு பாரத ரத்னா விடுதை எதிர்த்து வழக்கு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, நவ.30 - பிரபல கிரக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.கனகசபை தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:_

இந்தியாவிலேயே தலை சிறந்த விருதாக பாரத் ரத்னா கருதப்படுகிறது. இந்த விருதை ஜனாதிபதி வழங்குகிறார். இந்த விருது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிலையான சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த விருது குறித்து 1954_ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதியின் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு மற்றொரு அறிவிப்பாணை 1955_ம் ஆண்டு வெளியிடப்பட்டது. பாரத ரத்னா வழங்குவதற்கு இந்த அறிவிப்பாணைதான் ஆணையாக உள்ளது.

அந்த அறிவிப்பாணைபடி கலை, மொழி, அறிவியல், சமுகசேவை ஆகியவற்றில் உயர்ந்த சேவையாற்றியவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும். அப்படி சேவையாற்றிவர்கள் பற்றிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். பாரத ரத்னா விருதைப் பெறும் நபரின் பெயரை அரசிதழில் 

அதுபோல் கொடுத்த விருதை திரும்பப் பெறவும், அவரது பெயரை பதிவேட்டில் இருந்து அழிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2011_ம் ஆண்டு டிசம்பரில் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியானது.

அதில், பாரத் ரத்னா விருது தொடர்பான நிபந்தனைகள் மாற்றப்பட்டு, அனைத்து துறையில் உள்ளவர்களுக்கும் அந்த விருது கிடைக்கும் வகையில் 16.11.11 அன்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரத ரத்னா விருதை, பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் அந்த விருது வழங்கப்படுவதாக பிரதமர் கடந்த 16_ந் தேதியன்று அறிவித்தார். அதை ஜனாதிபதியும் பத்திரிகை செய்திக் குறிப்பு மூலம் அறிவித்தார்.

ஆனால் அந்த இரண்டு பேருடைய பெயர்களும் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இது ஜனாதிபதியின் 1955_ம் ஆண்டு அறிவிப்பாணைக்கு முரணான செயலாகும்.

மேலும், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட 14 அறிவிப்பாணைகளை பெற்று அவற்றை சரிபார்த்தேன். ஆனால் பாரத ரத்னா வழங்குவது தொடர்பான நிபந்தனைகளில் மாற்றங்கள் எதுவும் கொண்டு வரப்பட்டதாகத் தெரியவில்லை.

தற்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டவர்களில் சி.என்.ஆர். ராவ் மட்டுமே அதைப் பெறத் தகுதியானவர். ஏனென்றால், கலை, மொழி, அறிவியல், சமுகசேவை ஆகிய துறைகளில் சச்சின் டெண்டுல்கர் வரவில்லை.

ஜனாதிபதி அறிவிப்பாணைக்கு முரணாக இவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இரண்டு பேருக்கும் 26.1.14 அன்று அல்லது எந்தத் தேதியிலும் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும். அவர்களுக்கு இந்த விருது வழங்கும் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார்.

விளையாட்டு உள்ளிட்ட மற்ற துறையினரும் அந்த விருதை பெறும் வகையில் அறிவிப்பாணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த மாற்றம் குறித்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறேன் என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை டிசம்பர் 3_ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்