முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி அரசு மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

வாரணாசி, மே 19 - உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்றும் மத்திய அரசின் நிதியை உ.பி.அமைச்சர்கள் உல்டா செய்துவிடுகின்றனர் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது. இம்மாநாட்டில் பேசிய உ.பி.  காங்கிரஸ் கட்சி தலைவர் ரீட்டா பகுகுணா, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். உத்தரபிரதேசத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்றும், எல்லா அமைச்சர்களும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரிவர பயன்படுத்தாமல் இந்த மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் அபேஸ் செய்துவிடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 

முதல்வர் மாயாவதி தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும், வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். வாரணாசியில் இன்று நடக்கும் 2 வது நாள் மாநாட்டிற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ஆகியோர் வருகை தரவுள்ளனர். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முதல்நாள் மாநாட்டில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்