நடிகை ராதாவை ஏமாற்றிய பைசூல் மீது கடத்தல் புகார்

Image Unavailable

 

சென்னை, டிச. 3 - நடிகை ராதா ஏமாற்றிய தொழில்அதிபர் பைசூல் மீது போதை பொருள் கடத்தல் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்புகாரில் கூறியபோது:_ சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா.இவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

அதில், பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி செக்ஸ் உறவு வைத்திருந்ததாகவும், ரூ. 50 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் மீது வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் பைசூல் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு வருகிற 4_ந்தேதி விசாரணைக்கு வருகிறது. நடிகை ராதா ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி பைசூலுக்கு முன் ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அக்ரம்கான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தொழில் அதிபர் பைசூல் மீது பரபரப்பான குற்றச் சாட்டுகளை கூறி உள்ளார்.

அவர் தனது மனுவில், எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பைசூல் ஆசை காட்டியுள்ளார். இதனால் ஏமாந்த இளைஞர்களிடம் கேட்ட மைன் என்ற போதை பொருளை கொடுத்து வெளிநாட்டில் கொடுக்க சொல்லி அனுப்பி உள்ளார்.

இதனால் அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாட்டு ஜெயில்களில் இருக்கிறார்கள். இதற்கு காரணமான பைசூல் மீதும், அவருடைய நெருங்கிய கூட்டாளி விஷால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ