முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா தலைவராக சைபால் ஆதல் தேர்வு

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மே.19 - அல்கொய்தா தலைவராக சைபால் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் கடந்த 2ம் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அல்கொய்தாவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது. பின்லேடனுக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் இருக்கும் ஜவாகிரி புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் சர்வதேச அளவில் அல்கொய்தா இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். மேலும் அந்த இயக்கத்தின் காப்பாளராகவும் செயல்படுகிறார். எனவே அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக எகிப்து நாட்டைச் சேர்ந்த சைபால் ஆதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எகிப்தில் ஜவாகிரியுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். இவருக்கு முன்னதாக முகமது முஸ்தாபா யாமினி என்பவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ளார். இதனால் சைபால் ஆதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைபால் தவிர அத்னன் அல்-கொரகி தகவல் தொடர்பாளராகவும் முகமது நசிர் அல்வாஷி அபுநஷீர் ஆப்பிரிக்க விவகாரங்களை கவனிப்பவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடன் மகன்களுக்கு எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்த இயக்கத்தில் பதவி வகிக்க யாரும் விரும்பவில்லை எனத்தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்