இங்கிலாந்தில் மர்மமான முறையில் இறந்த இந்திய தம்பதி

Image Unavailable

 

லண்டன், டிச.3 - இங்கிலாந்தில் இந்திய தம்பதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனுக்கு அருகே உள்ளது சவுத் ஹால், இங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்திய தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக அவர்களை காணவில்லை என குடியிரப்போர் நல சங்க உறுப்பினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை நட்த்தினர். அங்கு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சலமும், தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமும் இருந்தது. போலீசார் விசாரணையில் இறந்து கிடந்த ஆண் சத்பீர் சிங் என்ற சஞ்சீவ் குமார் (36), பெண் பூணம் (35) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தம்பதியர். பெண் கொல்லப்பட்ட நிலையிலும், ஆண் மரமமான முறையிலும் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்று சவுத் ஹால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ