முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு பாரத ரத்னா: எதிர்த்த மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை.டிச.4. - இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் வக்கீல் கனகசபை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:_

கிரிக்கெட் வீரர் சச்சின் தொண்டுல்கர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன் மோகன்சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

பொதுவாக பாரத ரத்னா விருது கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்கப்படும்.

விளையாட்டு வீரருக்கு இதுபோன்ற விருது வழங்கப்பட்டது இல்லை. தொண்டுல்கருக்கு இந்த விருதை அறிவித்து இருப்பது விதிமுறை மீறலாகும். எனவே இதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று  முன்தினம்  விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் பி.வில்சன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 

இந்திய ஜனாதிபதி 16_11_2011 அன்று வெளியிட்ட அறிக்கையில், கலை, இலக்கியம், அறிவியல் மட்டுமல்லாமல் பிற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்றும் இதன் அடிப்படையில் சச்சின் தொண்டுல்கர் பாரத ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்  .என்றும் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் இவர் வழக்கின் விசாரணை நேற்றும் தொடர்ந்தது. அப்போது இவ்வழக்கை தொடந்து விசாரித்த நீதிபதிகள் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்