முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திபெத்தை தனி நாடாக அறிவிக்க இங்கிலாந்து பிரதமர் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பீஜிங், டிச.4 - சீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், திபெத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்க கூடாது என்று பேட்டி அளித்தார். இதனால், திபெத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை, கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா சந்தித்து பேசினார். திபெத்தை சுதந்திரம்மற்றும் தன்னாட்சி பெற்ற நாடாக சீனா அங்கீகரிக்க வலியுறுத்த வேண்டும் என்று கேமரூனிடம் தலாய் லாமாக கோரிக்கை விடுத்தாக செய்திகள் வெளியாயின. தலாய் லாமாவை சந்தித்து கேமரூன் பேசியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இங்கிலாந்துடனான பல தொடர்புகளை சீனா துண்டித்து கொண்டது. இதனால், கேமரூனின் சீன பயணம் தள்ளி போனது. பரபரப்பான சூழ்நிலையில், டேவிட் கேமரூன் நேற்று முன்தினம் சீனா வந்தார். அவருக்கு பீஜிங் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது நிருபர்களிடம் கேமரூன் கூறியதாவது. சீனா- இங்கிலாந்து  இடையில் நல்லுறவு, அணு சக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும். மேலும், பல ஒப்பந்தங்களும்  நிறைவேற்றப்பட உள்ளன. சீனாவின் ஒரு அங்கம்தான்திபெத் அதற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க கூடாது. இவ்வாறு கேமரூன் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை கோரி திபெத்தியர்கள் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, புத்த மத துறவிகள் பலர் சீனாவில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் கேமரூனின் பேட்டி சர்ச்சையை எழுப்பி உள்ளது. டேவிட் கேமரூன் வருகை குறித்து சீன பிரதமர் லீ கெகியாங் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒப்பந்தம், புரிதல், சம உரிமை உள்ளிட்ட பல்வேறு உணர்வுபூர்வமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அதிபர் ஜீ ஜின்பிங்- கையும் சந்தித்து டேவிட் கேமரூன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்