போரில் பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர்

Image Unavailable

 

புதுடெல்லி, டிச.5- இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெல்வதற்கான சாத்தியமே இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மீண்டும் எந்த நேரத்திலும் போர் மூளும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, அத்தகைய போரில், என் வாழ்நாளில் பாகிஸ்தான் வெல்வதற்கான சாத்தியமே இல்லை என்றார்.

முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் ஜம்மு - காஷ்மீர் கவுன்சில் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நவாஸ் ஷெரீப் பேசினார்.

அப்போது, காஷ்மீர் பிரச்சினையில் இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் ஆபத்து உண்டு என்றும் அவர் பேசியதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'டான்' நாளிதழில் செய்தி வெளியானது.

ஆனால், இந்தத் தகவலை மறுத்த நவாஸ் ஷெரீப்பின் அலுவலகம், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியதாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ